Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - எறாவூர்ப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுத்தொழுகை நடத்தப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஒரே தலைப்பில், நேரக் கட்டுப்பாட்டுடன் பிரசங்கத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்து உலமா சபையின் ஏறாவூர்க் கிளை தீர்மானித்துள்ளது.
ஜம்இய்யத்து உலமா சபையினருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையே, சபை அலுவலகத்தில், நேற்று முன்தினம் (26) நடைபெற்ற விசேட சந்திப்பில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இச்சந்திப்பு, உலமா சபையின் நடவடிக்கைகளை, புதிய உத்வேகத்துடன் முன்னெடுப்பதற்காக ஊடகவியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், உலமா சபையின் தலைவர் மௌலவி நிராஸ் உஸ்வி தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இங்கு சமூகத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பல விடயங்கள் ஆராயப்பட்டன.
வாரமொன்றின் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பிலேயே வெள்ளிக்கிழமைகளில் பிரசங்கம் நடத்தப்படவேண்மென, இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், காலப்பொருத்தத்துக்கேற்ப தலைப்புகளையும் குறிப்பாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயங்களையும் ஜம்இய்யத்து உலமா சபை எழுத்துமூலமாக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் வழங்கவேண்டுமென, ஊடகவியலாளர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
ஒரே தலைப்பில் பிரசங்கம் நடத்தப்பட்டால் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை, ஊடகவியலாளர்கள் வெளியிட்டனர்.
இதேவேளை, பிரதான வீதியோரமுள்ள முகைதீன் ஜும்ஆப்பள்ளி, ஜாமிஉல் அக்பர் ஜும்ஆப்பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில் அரசாங்க ஊழியர்கள், பயணிகள், சுகயீனமுற்றவர்கள் போன்றோரது நலன்கருதி, பிற்பகல் ஒரு மணியுடன் பிரசங்கம் நிறைவுசெய்யப்படவேண்டுமெனவும் ஏனைய பள்ளிவாசல்களில் மேலும் சில நிமிட நேரம் பிரசங்கத்தைத் தொடரமுடியுமென்றும் அறிவிக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago