2025 மே 07, புதன்கிழமை

‘அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல’

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி   

மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல என இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோவில்போரதீவு உதயதாரகை விளையாட்டு கழகத்துக்கு கால்பந்தாட்ட பாதணிகளை, இன்று (19) வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியலில் வாக்களிப்பது, ஆதரவு தெரிவிப்பது என்பதெல்லாம் ஜனநாயகம். அதற்கும் மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திக்கான நிதிகளையும் இடைநிறுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

“பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அபிவிருத்தி சென்றடைய வேண்டுமென்ற மனநிலைக்கு அரசியல்வாதிகள் மாற்றமடைய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X