2025 மே 02, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திகள் வேண்டுமெனில், ‘அரசாங்கத்துடன் இணைய வேண்டும்’

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

“கடந்த காலத்தில், கிழக்கு மாகாணத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள், தமிழர்களின்  தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், பலவிதமான அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்கள்” என, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன் தெரிவித்தார்.

“அவ்வாறான அபிவிருத்திகளை தற்போதும் முன்னெடுத்துச் செல்வதாகவிருந்தால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தில், தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாது காணப்படுகின்றன. கடந்த காலத்தில் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதற்கு தமிழ்க் கட்சிகளுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், அவற்றை யாரும் சரியாகப் பயன்படுத்தவில்லை” என்றார்.

“கல்வி சார்ந்த துறையிலிருந்து நான் அரசியலுக்கு வருவதாகவிருந்தால், நான் தெரிவுசெய்யும் கட்சி அரசாங்கத்தோடு இணைந்து செயற்படக் கூடிய கட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் போட்டியிட நான் முன்வந்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தை எதிர்த்து, எதிர்கட்சியிலிருந்து செயற்படமுடியும். ஆனால், அபிவிருத்தியை நோக்கும் போது, எமக்கு அரசியல் பலம் மிகவும் முக்கியமானதாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X