2025 மே 14, புதன்கிழமை

அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி பிற்பகல்  02.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் பிரதான அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  அதிதியாகக் கலந்து நினைவுப் பேருரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .