Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித் வா.கிருஸ்ணா
பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவரும் சிறந்த சமூக, சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், புதுவருட தினமான நேற்று (01) மட்டக்களப்பில் தனது 94ஆவது வயதில் காலமானார்.
நீண்ட நாள்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர், நேற்று அதிகாலை இறையடி சேர்ந்ததாகவும், இன்று (02) பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லு10ரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், 1948ஆம் ஆண்டு, மட்டக்களப்புக்கு வருகை தந்து கடந்த 70 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான, சமூகப்பணி, கல்விப்பணியாற்றியவர்.
இலங்கைக்கு வந்த அருட்தந்தை ஹரி மில்லர், ஆங்கில மொழிமூலம் புனித மிக்கேல் கல்லூரியில் வரலாறும் பௌதிகமும் கற்பிப்பதில் பணியை ஆரம்பித்தார்.
சமாதான சகவாழ்வு வேலைத்திட்டத்துக்குப் பாரிய பங்களிப்புச் செய்த அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், மட்டக்களப்பில் 1980களில் றொட்டறிக் கழகம், சமாதானக் குழு, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு செங்சிலுவைச் சங்கம் என்பவற்றை நிறுவுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர். 1990 யுத்த காலத்தில் அப்பாவியான மக்களைப் பாதுகாப்புப் படைகளிடமிருந்து மீட்பதற்குப் படைகளுக்கு மிகவும் உதவியாக இருந்ததோடு, காணாமல் போனவர்களின் விவரங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்.
இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அறிவதற்காக, வெளிநாட்டு இராஜ தந்திரிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அருட்தந்தையிடமிருந்து யுத்தகால அவலங்களை வெளிப்படுத்தியவர்.
2002-2004 இல் நோர்வேஜிய அரசு செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நிறுவிய யுத்த நிறுத்த கண்காணிப்பக் குழுவிற்கு அரசு அருட்தந்தை மில்லரை நியமித்தது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளராக மற்றும் ஆசிரியராக கடமையாற்றியதுடன், அதிபாராக 15 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
மட்டக்களப்பில் சர்வமத அமைப்பு மற்றும் சமாதான பேரவை உட்பட பல்வேறு சமூக சிவில் அமைப்புகள் என்பவற்றில் முக்கியஸ்தராக இருந்து, யுத்த காலத்தில் சிறந்த மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago