2025 மே 21, புதன்கிழமை

அமைதிக்காக சர்வமத சமாதான ஊர்வலம்

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக சமாதான தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட சமாதான ஊர்வலம், இன்று (30) இடம்பெற்றது.

சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டுள்ள சமகாலத்தில் அதனை செயலுருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதை வலியுறுத்தியும், இந்த சமாதான ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருமலை வீதி தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலய முன்றலில் இருந்து காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இவ்வூர்வலம், மட்டக்களப்பு காந்திப் பூங்காவைச் சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் பங்குகொண்டவர்கள் “காணாமல்போனோர் தொடர்பாக அரசே பதில் கூறு, ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்து, அதிகாரத்தைப் பகிர்ந்து தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவுகட்டு, கிழக்கு மக்களின் நிலங்களை உடன் கையளி”, என்ற பதாதைகளை தேசிய நல்லிணக்கத்துக்கான கிழக்கின் குரல் என்ற பெரும் கோஷத்துடன் ‪  வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .