Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள், காற்றில் பறக்கவிடப்பட்டனவாக இருக்கக் கூடாதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், எதிர்வருகின்ற வரவு – செலவுத் திட்டத்தில், தொழிற்சாலைகள் அமைக்கின்ற, தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு - சந்திவெளி, சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற வரவு - செலவுத் திட்டத்தின் போது, தொழிற்சாலைகள் அமைக்கின்ற விடயம், பாலங்கள், வீதிகள் அமைக்கின்ற விடயம், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றார்.
அத்துடன், படுவான்கரை, எழுவான்கரைப் பிரதேசங்களுக்கான இணைப்புகளை ஏற்படுத்தவதற்கு, பாலங்கள் அவசியமாக இருப்பதாகவும் எனவே, சந்திவெளி, திகிலிவெட்டைப் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, தமது பிரதேசங்களில், விளையாட்டு மைதானங்கள் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றன எனவும் அவற்றையும் நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் இவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago