Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மறைந்த பெருந் தலைவர் அஷ்ரபின் அரசியல் சாணக்கியம் சமயோசிதம் எல்லாவற்றிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களாக, தற்போதைய அரசியல் எஜமானர்களுக்கு சாமரம் வீசுகின்றவர்களாக முஸ்லிம் அரசியல் நகர்ந்து கொண்டிருப்பது, இந்த சமூகத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடும்” என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் எச்சரித்தார்.
ஏறாவூர், அல்-முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து, பாடசாலைக்கான ஆராதனை மண்டபம் மற்றும் அலுவலக உபகரணங்களை, நேற்று (27) வழங்கி வைக்கும் போதே, அவர் இவ்வாறு எச்சரித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் முதலமைச்சரால் ஏற்பட்ட திராணியற்ற இயலாத் தன்மையை, தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், தனது இரண்டரை வருட கால அரசியல் சாணக்கியத்தின் மூலம் செயற்திறனுள்ள நல்லாட்சியை நிறுவிக் காட்டியுள்ளார்.
“அதில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றது ஒரு புறமிருக்க, சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அடையப் பெற்றது ஏராளம்.
“அதிலும் நீண்ட காலமாக சிதறுண்டு போயிருந்த தமிழ், முஸ்லிம் உறவு என்பதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேசம் என்பதும் சிறுபான்மையினரின் எதிர்கால தனித்துவத்துக்கு ஓர் அடித்தளமாகும்.
“ஆனால் தூர நோக்கற்று விமர்சிக்கும் ஒரு சிலர், தமது அறியாமை காரணமாக முற்றத்து மல்லிகையின் சிறப்பை அறியாது முட்டாள் தனமாகப் பேசுவதோடு, இந்த சமூகத்தை தவறாகவும் வழிநடத்துகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .