Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விடயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பிரதமர் தெரிவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையென நிற்பந்தம் உள்ளமையால், சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக, மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், வட, கிழக்கிலுள்ள கட்சிகள், தங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வைத்துக் கொண்டு, பேரம் பேசுகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
“இது சிறுபான்மை இனத்துக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஏற்றம், காணி பகிர்ந்தளிப்பு, வட, கிழக்கு இணைப்பு, அதிகாரப் பங்கீடு, கைதிகள் விடுதலை, காணி தொடர்பான பிணக்கு, சர்வதேச ரீதியான விசாரணை இன்னும் வலுவான தேவைகள் போன்றவற்றைப் பேசி முடிப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாகும். இதை சரியாக அறுவடை செய்தால், கூடுதலான இலாபத்தைப் பெறமுடியும்.
“எனவே, இச்சூழலை புரிந்து கொண்டு, நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களை கையில் எடுத்துக் கொண்டு, இலாபகரமாக மக்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை உத்தரவாதப்படுத்தி, அமுல்படுத்துவதற்குள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025