2025 மே 05, திங்கட்கிழமை

அரச அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி

Editorial   / 2021 மே 26 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, எம் எஸ் எம் நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு, சினோபாம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, இராணுவத்தினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலகத்தில் இன்று  (26)  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முதலாவது தடுப்பூசியை மாவட்டச் செயலாளரும், மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனுக்கு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மக்களுக்கான சேவையைத் தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென்பதற்காக மக்கள் மத்தியில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகத்தின் கிளைத் தலைவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X