2025 மே 01, வியாழக்கிழமை

அரச உத்தியோகத்தர்களுக்கான பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கான  புதிய பஸ் சேவையொன்று, அரச உத்தியோகத்தர்களுக்காக, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் இன்று (05) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு உத்தியோகபூர்வமாக இச்சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பல வருடங்களாக, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து திருகோணமலைக்கு அரச சேவைக்காக நாளாந்தம் சென்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களின் நன்மை கருதி, இந்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .