Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் சுழற்சிமுறையில் கடமைக்கு சமுகமளித்து சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து தமது அரச கடமைகளை மேற்கொண்டு வருவதாக, மாவட்டச் செயாலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
இது விடயமாக மேலும் தெரிவித்த அவர், சுகாதார பகுதியினரின் அறிவுறுத்தல் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“அலுவலக நுழைவாயிலில் கைகழுவும் நடைமுறையை பொதுமக்கள், உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கும்படி கண்டிப்பாக்கப்பட்டுள்ளது.
“அதனை தவிரவும் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிவது, உத்தியோகத்தர்கள் காலையில் அலுவலகங்களுக்கு வருவதற்கு முன்னரும் கடமை முடிந்து உத்தியோகத்தர்கள் அலுவலகங்களைவிட்டு வெளியேறும்போதும்; தொற்று நீக்கி விசிறுவதும் நடைபெற்று வருகின்றன.
“வெளிமாவட்டங்களில் இருந்து கடமை இங்கு வந்து கடமை புரியும் உத்தியோகத்தர்களை அவசியம் ஏற்படும்பட்சத்தில் அழைப்பதாகவும் அதுவரை அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர்.
“அதனைத்தவிர அலுவலகத்தினை அண்மித்து வசிக்கின்ற உத்தியொகத்தர்கள் தமது பகுதித் தலைவர்களின் வேண்டுகோளைப்பொறுத்து ஆளணிக் கடமைக் குழாம் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago