2025 மே 14, புதன்கிழமை

‘அறிவித்தல் வரும்வரை சோளச் செய்கையில் ஈடுபடவேண்டாம்’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய அமைச்சின் அறிவித்தல் வரும்வரை, படைப்புழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இடங்களிலும் அவரசப்பட்டு சோளம் செய்கையில் ஈடுபட வேண்டாமென, விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, விவசாயிகளைக் கேட்டுள்ளார்.

ஓட்டமாவடி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து காற்றின்மூலம் குறித்த படைப்புழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் இப்படைப்புழு பரவக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படைப்புழுவால் சோளச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

படைப்புழுவை முழுமையாகக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகளை விவசாய அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்மூலம் முழுமையாக படைப்புழுவைக் கட்டுப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X