2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அறுவடை ஆரம்பிக்கப்பட்டதும் நெல் கொள்வனவு இடம்பெற வேண்டும்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டதும் நெல்லைக் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், இன்று செவ்வாய்க்கிழமை  தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஏக்கர்; விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் சுமார்; ஒரு இலட்சத்து 35 ஆயிரம்  ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லில் 10 சதவீதத்தை உணவுக்கும் 5 சதவீதத்தை விதை நெல்லுக்கும் 5 சதவீதத்தை வீட்டிலும் வைக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

மேலும், 95 சதவீதமான விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் நெல்; அறுவடை செய்கின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் ஈரத்தன்மை உடையதாகக் காணப்படுவதால், 75 சதவீதமான விவசாயிகள் நெல்லை உலர வைப்பதற்கு இடவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன்,  அவர்கள் அரை விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலைமையும் கடந்த 10 வருடங்களாகக் காணப்படுகின்றது.

கடந்த வருடங்களில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல்லை களஞ்சியசாலைகளிலிருந்து அகற்றிவிட்டு, புதிய நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தும் வசதியைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.  
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X