Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாத்தீவு கடற்கரையில் சவுக்குமரங்கள் அமைந்துள்ள பகுதியில் ஆயுதங்கள், தங்கம் என்பன புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் வெள்ளிக்ழமை (09) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர், மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்தனர். இதன்போது, ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என்பதுடன், ஏனையவர்கள் தப்பியோடினர்.
அவ்விடத்தில் ஆயுதங்கள், தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக கைது செய்யப்பட்ட நபர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவ்விடத்தை அகழ்வு செய்வதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிகுடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நேற்று (10) உரிய இடத்துக்கு வருகைதந்து, பெக்கோ இயந்திரம் கொண்டு அகழ்வு செய்தனர்.
எனினும், அங்கு ஆயுதங்களோ, தங்கமோ கிடைத்திருக்கவில்லை என்பதுடன், நிலைமையை அவதானித்த படையினர், அதிகாரிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
47 minute ago
55 minute ago