2025 மே 09, வெள்ளிக்கிழமை

அஹிம்சை வழி நடைபவனி தொடர்கிறது

Princiya Dixci   / 2022 மே 22 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வன்முறையற்ற அஹிம்சை ரீதியான சமூகத்தை உருவாக்க – பிரார்த்தித்து மட்டக்களப்பில் 10ஆவது நாளாகவும் பிரார்த்தனை நடைபவனி இடம்பெற்று வருகின்றது.

சகல சமூக நண்பர்களாக  ஒன்றிணைந்து இந்த நடை பவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு, புளியடிக்குடா செபஸ்தியர் தேவாலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்த இந்தப் பிரார்த்தனை நடைபவனி, மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள காந்தி பூங்காவை நேற்று (21) சென்றடைந்தது.

பிரார்த்தனை நடை பவனியில் கலந்துகொண்டவர்கள், தமது ஆடைகளில் காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அம்ச வேண்டுகோள்கள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை, காந்தி அடிகளின் சிலை அமைந்துள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தியதுடன், சுடரெற்றி சில நிமிடங்கள் அமைதியான முறையில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

“அமைதிக்காக நீதிக்காக நாங்கள் நடக்கின்றோம்", "நம் அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு அத்தியாவசியமாகும்" "நம்பகமான திடமான அரசாங்கம் எமது உரிமை", "பசியின்றி, பிணியின்றி, கல்வி, சுகாதாரம் என்பன  அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிம்மதியான வாழ்வே எம் அனைவருக்கும் தேவை" மற்றும் "வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், எமது நாட்டை மீட்டெடுக்க அமைதியாக போராட வெளிவந்துள்ளோம்"  போன்ற பல்வேறுபட்ட வாசகங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பிரார்த்தனை நடைபவனி தொடர்ச்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X