Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார்.
தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு இரண்டாவதாக உள்ளதுடன் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ம் திகதி வரை 12 வயது சிறுவன் ஒருவர், 26 பெண்கள் உட்பட 105 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கனகராசா சரவணன்
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago