Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகரப் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில், நேற்று மாலை வேளையிலிருந்து இன்று (03) அதிகாலை வரை பெய்த பலத்த மழை காரணமாக, சுமார் 1,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவென, பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தெரிவித்தார்.
இவ்விதம் தமது வாழ்விடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதோடு, சிரமத்தை எதிர்கொண்டுள்ளனவெனவும் இவர்களுக்கு அவசர உதவிகளை வழங்க சமூக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பொருத்தமான இடைத்தங்கல் முகாம்கள் இல்லாததாலும் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு வரத் தயங்குவதால் அவர்களுக்கு அரச நிவாரணங்களைச் சிபார்சு செய்வதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தடைப்பட்டுத் தேங்கி நிற்கும் வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதில் ஏறாவூர் நகர சபையுடன் இணைந்து, பிரதேச செயலக அலுவலர்களும் இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருவதாக, பிரதேச செயலாளர் அல்அமீன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் ஐயன்கேணி, மிச்நகர், ஏறாவூர் 2பி பிரிவு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் கடுமையாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்தப் பகுதிகளிலிருந்து வெள்ள நீரை ஏறாவூர் வாவிக்கூடாக வெளியேற்றுவதில் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
3 hours ago