Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 12 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனைப் பற்று, (ஆரையம்பதி) பிரதேச சபை அமர்வில் தவிசாளரின் உரையில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, சபை அமர்விலிருந்து உறுப்பினர்கள் சிலர் வெளியேறியதால் சபை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் நான்காவது அமர்வு, தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் நேற்று (11) இடம்பெற்ற போது, மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நகுலேஸ்வரனால் வணக்கஸ்தலங்களின் திருவிழாக்கள், உற்சவங்களின் போதும் அனர்த்தங்களின் போதும், மண்முனைப் பற்று பிரதேச சபையால் இலவசமாகத் தண்ணீர் வழங்குவது தொடாபான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அப்பிரேரணை தொடர்பில், சபைத் தவிசாளர் உரையாற்றிய போது, அவரது உரையில் அப்பிரதேசத்திலுள்ள இந்து ஆலயமொன்றின் நிர்வாகத்தை விமர்சித்ததாகவும் இன முரன்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் உரை அமைந்திருந்ததாகவும் கூறி, அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பாடுச் செய்தனர்.
இதன்போது, சபையை 15 நிமிடங்களுக்கு தவிசாளர் ஒத்திவைத்தார். 15 நிமிடங்களின் பின்னர் வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள், மீண்டும் சபை அமர்வுக்குச் செல்லாததால், சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில், சபையின் தவிசாளரிடம் கேட்ட போது, வேண்டுமென்றே இவர்கள் குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றனர் எனவும், இவர்கள் சாட்டும் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் தெரிவித்தார்.
26 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
47 minute ago