2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்றலுள்ள இளைஞர், யுவதிகளைத் தெரிவு செய்வதற்கான நேர்காணல்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஆற்றலுள்ள இளைஞர், யுவதிகளின் செயற்பாட்டுக்கு (Youth Got Talent), ஆற்றலுள்ள இளைஞர், யுவதிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் மட்டக்களப்பில் சனிக்கிழமை (06) இடம்பெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்ற இந்தச் செயற்பாட்டு வெளிப்படுத்துகைத் தேர்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்திய 82 பேர் கலந்து கொண்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.

ஆற்றல் வெளிப்பாட்டுத் தேர்வில் கலந்து கொண்டவர்களிலிருந்து 10 பேர் தேசிய மட்டத் தெரிவுக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய மட்டத்தில் 360 இளைஞர் யுவதிகளிடையே இரண்டாவது சுற்றுத் தேர்வு இடம்பெறும். அதிலிருந்து 30 பேர் இறுதிச் சுற்றுத் தெரிவுக்குத் தகுதி பெறுவர்.

இறுதிச் சுற்றில் தெரிவாகுவோரிலிருந்து 10 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்களில் முதலாவது ஆற்றலுள்ள இளைஞன் அல்லது யுவதிக்கு 20 இலட்ச ரூபாயும் இரண்டாவது திறமையாளருக்கு 10 இலட்சம் ரூபாயும், மூன்றாவது நபருக்கு 5 இலட்சமும் ஏனைய ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சமும் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X