Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2017 ஜூன் 02 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், மாவட்ட செயலகத்தில் நேற்று (01) ஒப்படைக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களே ஒப்படைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் பணிப்புரைக்கமைவாக பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையிலான அலுவலக உத்தியோகத்தர்கள் இப்பணியை முன்னெடுத்தனர்.
இந்த மனிதாபிமான பிரதேச பொதுமக்களும் தனவந்தர்களும் தாமகாவே முன்வந்து உதவியதுடன், சுனாமி அனர்த்தத்தின் போது தென்பகுதி மக்கள் உணர்வோடு கிழக்கு கரையோர பகுதி மக்களுக்கு உதவியமையையும் அம்மக்கள் நினைவூட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
25 May 2025