Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 06 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியேற்று முதன் முறையாக ஏறாவூருக்கு வருகை தரும்போது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
அந்த வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் விஜயம், எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதுபற்றி மேலும் தெரிவித்த சுபைர், அன்றையதினம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, ஏறாவூர் மாவட்ட ஆயள்வேத வைத்தியசாலையில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் கட்டடத்துக்கான அடிக்கல் நட்டல், ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தியதுக்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் செய்யப்படவுள்ளன என்றார்.
அத்துடன், ஏறாவூர் - புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள அப்பதுல் மஜீத் மாவத்தையில் சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கொங்றீட் வீதியை, மக்கள் பாவனைக்காகக் கையளித்தல், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வீடு, மலசலகூடம் அற்ற 50 பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago