2025 மே 07, புதன்கிழமை

ஆளுநரின் மக்கள் சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன் ,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண ஆளுநரின் மாதாந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் நேற்றுப் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக் காரியாலயத்தில் பொதுமக்களைச் சந்தித்தார்.

பொதுமக்களின் காலடிக்கு வந்து, குறைபாடுகளை ஆராய்ந்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் நோக்குடன்  மாதாந்தம், கிழக்கு

மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங் களிலும் இம்மக்கள் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையிலேயே, மட்டக்களப்பு மாவட்ட  மக்கள் சந்திப்பு  நடைபெற்றது.

மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த பொதுமக்கள் தமது குறைகளையும்  பிரச்சினைகளையும் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுச் சென்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X