Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை, மீராவோடை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து, அங்கு காணப்படும் ஆளணி, வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேஹ். எம்.எம்.எஸ். ஹாறூன் தெரிவித்தார்.
இது விடயமான கலந்துரையாடல், மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கும் இடையில், அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தில் இன்று (12) இடம்பெற்றது.
இச்சந்திப்பில், கருத்து தெரிவித்த ஹாறூன் மேலும் கூறுகையில், வாழைச்சேனை மற்றும் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு எனது அழைப்பினையேற்று மிக விரைவில் கிழக்கு ஆளுநர், விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்றார்.
ஆளுநரின் விஜயத்தின்போது, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்துவருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அச்சந்திப்பில் மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தையும் கேட்டறிந்து, முடியுமான தீர்வைப் பெற்றுத்தருவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினரால், ஆளுநரை, வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago