2025 மே 07, புதன்கிழமை

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் காணாமல் போயுள்ளார்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளாரெனவும் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், வாழைச்சேனை துறைமுகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து இன்று (19) மதியம் ஆழ்கடலுக்கு மீன்படிப்பதற்காக சென்ற படகு, வாழைச்சேனையில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில், படகில் இருந்த ஒருவர் தவறுதலாகக் கடலில் விழுந்ததாகவும் அவரைத் தேடும் பணியில் குறித்த நபர் சென்ற படகும் துறைமுகத்தில் இருந்து சென்ற படகுமாக இரண்டு படகுகள், கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில், மாவடிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பௌசுல் முஹம்மட் இக்ரம் (வயது – 31) என்பவரும் அவரது தந்தையும் மற்றுமொருவருமாக மூன்று பேர் சென்ற நிலையிலே பௌசுல் முஹம்மட் இக்ரம் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X