Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 ஜூன் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருட நடுப்பகுதியில், கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரிய இடமாற்றத்தை, இரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண சபையின், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், அவசர பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில், நேற்று (16), கிழக்கு மாகாணசபையின் செயலாளருக்கு, பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கிழக்கு மாகாணத்தில் பொருத்தமில்லாத காலப்பகுதியில் வருடாந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துவதால,; கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.
'மேலும் எதிர்வரும் 8ஆம் மாதம், கல்வி பொது தராதர உயர்பரீட்சையும் 12ஆம் மாதத்தில், கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையும் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால், கல்வி கற்று வரும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையானது, பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
'அத்துடன் தேசிய கொள்கை அடிப்படையின்படி, இடமாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வேண்டி, வலயக் கல்விப் பணிப்பாளருக்கூடாக விண்ணப்பித்தே இடமாற்றத்தை பெற வேண்டும்.
'எனவே வருட நடுப்பகுதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை உடன் இரத்து செய்யும் படி கேட்டுக்கொள்கின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago