Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டுமென, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா பணிப்புரை விடுத்துள்ளார்.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மூலமாக தொழிற்பயிற்சி நிலையங்கள் பிராந்தியங்கள் வாயிலாக அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள கலாசார மண்டபக் கட்டடத்தில் ஏறாவூர் இளைஞர், யுவதிகள் கனிணி கற்கை நெறியைத் தொடரக்கூடியதான நிலையம் தற்காலிகமாகச் செயற்பட்டது.
இதன்மூலமாக, ஏறாவூரை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள ஒரு பயிற்சி நெறியைக் கொண்ட நிலையங்களை மூடி, பிராந்திய நிலையங்களுடன் இணைக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு அமைவாக, ஏறாவூர் நிலையத்தை மூடி, அப்பயிற்சி நெறிகளை வந்தாருமூலை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்துடன் இணைக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விடயம், இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தொழிற்பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சூசூலாங்கனி பெரேராவை தொடர்பு கொண்டு, ஏறாவூர் நிலையத்தை மூடி விடும் குறித்த நடவடிக்கையை உடனடியாகச்இரத்துச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago