Editorial / 2021 நவம்பர் 09 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
எழுத, வாசிக்க இடர்படும் மாணவர்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு, மட்டக்களப்பில் இயங்கிவரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு, காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் தரம் 5 இல் இருந்து 8 வரையான மாணவர்களுக்கு விசேட பயிற்சி, இன்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜெயகுமணன் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர்.
பல்வேறு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இவ்வாறான செயற்பாடு இப்பிரதேசத்தில் பின்னடைவாக காணப்படும் பாடசாலைகளில் அவசிய தேவையாக இருப்பதால், பரீட்சாத்தமாக இதனை ஆரம்பிப்பதாகவும் இதற்கு கனடாவில் இருந்து முருகேசு விசாகன் என்பவர் நிதி வழங்க இருப்பதாகவும் விவேகானந்த அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
இதுபோன்று, இப்பிரதேசத்தில் இன்னும் பின்தங்கிய 15க்கு மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதென்றும் அவற்றிலும் எழுத்து வாசித்தல் இடர்படும் மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கும் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளும் போது கல்விச் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .