Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நேற்று (23) இரவு நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களிப்பு நடைபெறும் போது நாங்கள் தோல்வியைச் சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், விசேடமான வெற்றி கிடைத்தது.
“அதேபோன்று உள்றுராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.
“எதிர்வரும் காலங்களில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடாது. தேசிய கட்சி மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்.
“ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து போட்டியிடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
“வடக்கு, கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களையும் உள்வாங்குவதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆனால், இவ்விடயமாக இதனை பலமுறை பேசியுள்ளோம். “இந்நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தேசத்தின் கீழ் ஒன்றுபட்டு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்” என்றார்.
இச்சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களான ஆறுமுகம் ஜெகன், எஸ்.மாசிலாமணி மற்றும் ஏறாவூர் பிரதேச கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், கட்சியின் செயற்பாடுகள் பற்றியும், அமைப்பாளர்கள் நியமிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
6 hours ago