2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இதுவரையில் 533 பேர் ஆலோசனைகளை முன்வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியினரிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 533 பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இதவரையில் முன்வைத்துள்ளதாக  அச்செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.காண்டீபன் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனையிலும் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடியிலும் சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்திலும் நடைபெற்றது.

இதில் வாழைச்சேனையில் 278 பேரும் களுவாஞ்சிக்குடியில் 77 பேரும் மட்டக்களப்பில் 178 பேரும் தமது ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X