Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிழக்கு மாகாணத் திட்டமிடல் பிரிவில் இயங்கும் சில அதிகாரிகளும் அதன் பணிப்பாளரும் சிறந்த முறையில் மக்கள் நலன்கருதி செயற்பாட்டல், மாகாணத்தில் உள்ள இடர்பாடுகளை குறைக்கலாம்” என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 11.9 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர் உரை நிகழ்த்தும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணத்தின் உள்ள அதிகாரிகள் இனப்பாகுபாடு இல்லாத முறையில் செயற்படுவார்கள் என்றால் மக்களுக்கான சேவைகளை சரியாக செய்ய முடியும்.
“கிழக்கு மாகாணத்துக்கான நிதிகளை வைத்தியசாலைக்கு ஒதுக்குவதில் திட்டமிடல் பிரிவில் அதிகாரிகள் இன வேறுபாடு பார்த்து நிதிகளைப் புறக்கணித்தால் எவ்வாறு இன ஒற்றுமை உருவாக்க முடியும் என்ற கேள்வியைத் தொடுக்க விரும்புகிறேன்.
“எனவே, அதிகாரிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சிறந்த முறையில் திட்டமிட்டு நிதிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக அதிகாரிகள் பொடுபோக்காக செயற்படக்கூடாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .