Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல்வாதிகள் இனவாதத்தை தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என அனைத்து சமூக மக்களிடமும் தான் அறைகூவல் விடுப்பதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இலங்கையில் காலகாலமாக அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் இருந்துவரும் இனவாத அரசியல்போக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
இந்த விடயம் குறித்து இன்று (31) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் தெளிவாக அடையாளங்கண்டு, அவர்களை நிராகரிக்க வேண்டுமென்றும் கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை நாம் நின்று நிதானித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இனவாத செயற்பாடுகளில் புதிய யுக்திகளை கையாண்டு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், வழமைபோன்று எதிர்வருகின்ற காலங்களிலும் முன்னெடுக்கப்படலாமென எச்சரித்த அவர், இதனை முறியடித்து, மக்கள் தமக்கிடையேயான நல்லுறவைப் பேண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
இனவாதம் பேசும் இலங்கை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் கூனிக்குறுகி நிற்கும் சூழ்நிலையை இலங்கை வாழ் அனைத்துச் சமூகங்களும் அணிதிரண்டு ஓரணியில் நின்று ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை அறியாமல் தமது அரசியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சில மனித சமுதாய விரோதிகள் இனவாதத்தை தமது கையிலெடுத்துள்ளார்கள் எனக் குற்றஞ்சாட்டிய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், நாளடைவில் இந்தப்போக்கு அவர்களுக்கே ஆபத்தானதாக வந்து முடியுமென்றும் உலக வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பயணிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இனத்துக்காய் குரல் கொடுக்கும் போர்வையில் இனவாதம் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இனவாத செயற்பாடுகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை எச்சரிக்கையோடு நாம் எதிர்கொள் வேண்டுமென்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பாரம்பரியமாக தங்களிடையே தொன்று தொட்டு இருந்து வந்த தமக்கிடையேயான நல்லுறவைப் பேண வேண்டுமென்றும் அவர் அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago