2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘இனவாத சிந்தனைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கவும்’

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனவாத சிந்தனை கொண்டவர்களுடைய விடயத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென,  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேட்டுள்ளது.

மட்டக்களப்பு - தாழங்குடா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிரேஷ்ட கல்வி அதிகாரி எம்.ஐ.எம். நவாஸ்  நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஒரு சில தமிழ் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தாம் கண்டிப்பதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்மேளனம் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை  பல்லின சமூக, கலாசாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழும் தேசமாகும். இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் நாடு சொந்தமானதாகும்.

“நாட்டினுடைய எப்பகுதியிலும் எந்தவொரு குடிமகனும் தொழில்புரிவதற்கும் உரித்துடையவர் என்பதும், அது இந்த நாட்டு மக்களுடைய அடிப்படை உரிமையுமாகும்.

“எம்.ஐ.எம்.நவாஸின் நியமனம், கல்வியமைச்சின் வழமையான சுற்றுநிரூபத்தத்துக்கு  அமைவாக வழங்கப்பட்டுள்ளதே தவிர, இதில் எவ்வித அரசியல் செல்வாக்குகளும் இல்லை.

“மேற்படி சம்பவத்தின் பின்னணியில் செயற்படுபவர்கள், இரு சமூகங்களை பிரித்து, அரசியல் செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X