2025 மே 15, வியாழக்கிழமை

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான உயர்மட்ட மாநாடு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை ஆரம்பித்துள்ளதையடுத்து, பல பகுதிகளில் வெள்ள அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸார், படையினர் எந்நேரமும்  தயாராகவே இருக்க வேண்டுமென, மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இம்மாவட்டத்தில், அனர்த்தங்களை எதிர்கொள்ளல் தொடர்பாக அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸார் படையினர், திணைக்களத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று (07) காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றபோதே அவர், இவ்வாறு தெரிவித்தர்.

இம் மாநாட்டில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸார், முப்படை அதிகாரிகள், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், கிராமசேவை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்  உட்பட பல திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .