2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியிலிருந்து மட்டக்களப்புக்கு நல்லிணக்க விஜயம்

வா.கிருஸ்ணா   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்கள், அந்த மக்கள் மத்தியில் இருக்கும் மக்கள் அமைப்புகளால் தீர்க்கப்படும்போது, நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானமும் ஏற்படுமென, மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இருந்து, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள இரத்தினபுரி எகட் ஹரிதாஸிசன் கிராம மட்ட சமாதான குழுவினர், ஆயர் இல்லத்துக்கு நேற்று (09) வருகைதந்த போதே, ஆயர் இவ்வாறு தெரிவித்தார்.

தெற்கு – கிழக்கு நல்லிணக்க விஜயத்தின் கீழ், இந்த விஜயத்தைமேற்கொண்டுள்ள இக்குழுவினர், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயங்களை மேற்கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் சந்திப்பின்போது, இரு சமூகங்கள் மத்தியில் கலந்துரையாடல்களின் அவசியம், அவற்றினை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X