2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இரு ஊடகவியலாளர் மீது தாக்குதல்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான்  ஏ.சி.றிஸ்வான் ஒத்திவைத்துள்ளார்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் எத்தனோல் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர், மார்ச் 21ஆம் திகதி அந்நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில்,  சந்தேக நபர்கள் இருவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே, வழக்கு விசாரணையை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X