Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 12 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகரில் காட்டுப்பள்ளி வீதியையும் அஸ்ரப் வீதியையும் இணைக்கும் சந்தியில் அமைந்துள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சி.சி.டி.வி கமெராக்கள், ஞாயிற்றுக்கிழமை (11) நள்ளிரவு திருட்டுப் போயுள்ளன என, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கடையின் மேல் கூரையில், இந்த இரு வீதிகளையும் நோட்டமிட்டவாறு இரண்டு கமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தக் கமெராக்களை உற்று நோக்கிப் அவதானித்த இருவர் கமெராவில் பதிவாகியுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், கமெராக்கள் திருடப்படுவதற்கு முன்னர், அந்தக் கமெராக்களை இவர்கள் இருவரும் திரும்பத் திரும்ப வந்து அவதானித்துள்ளனர் எனவும் கூறினர்.
இது இவ்வாறிருக்க, ஏறாவூர் நகரில் பெண்கள் சந்தை இரண்டாம் குறுக்கு வீதியை அண்டியுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த ஒருவர், சைக்கிளொன்றை திருடிச் செல்லும் காட்சி, அந்த வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்ததை அடுத்து, மேற்படி நபரை, மக்கள் அடையாளம் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 30 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.
அவ்வீதியில் சந்தேகநபர் நடமாடித் திரிந்து, வீடொன்றுக்குள் நுழைந்து சைக்கிளைத் திருடிச் செல்வது, கமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரை அடையாளம் கண்டு கொண்டவர்கள், அவரது வீட்டுக்குச் சென்று வேலையொன்று இருப்பதாகவும் அதற்கு கூலி ஆள் தேவையெனக் கூறி அழைத்துச் சென்று, சி.சி.டி.வி கமெராப் பதிவுடன் தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் எனவும் பொலிஸார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago