Sudharshini / 2015 நவம்பர் 28 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், பேரின்பராஜா சபேஷ்
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று இருந்த தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
இதில் அதிகமான பங்களிப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தையே சாரும். அதில் நானும் இடம்பெற்றிருந்ததன் காரணமாகத்தான் என்னால் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர் என அவர் குறிப்பிட்டார்.
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago