Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இறால் பண்ணை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவச் சங்கங்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் புதன்கிழமை (10) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வாகரைப் பிரதேச மீனவச்; சங்கங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
வாகரை மீனவச் சங்கத் தலைவர் மு.சுப்ரமணியம் இங்கு தெரிவிக்கையில், 'கைவிடப்பட்டதாக நாம் எண்ணியிருந்த வாகரை இறால் பண்னை அமைக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த இறால் பண்னை அமைக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறான செய்தி. இதனை நாம்; நிராகரிக்கின்றோம்' என்றார்.
'இறால் பண்ணை அமைக்கப்படுவதால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வர். இதேவேளை, வீச்சுவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்வர்.
இறால் பண்ணையின் மூலம் வெளியாகும் நச்சுப்பதார்த்தங்கள் உப்பாற்றில் கலக்கும் நிலைமை ஏற்படும். இதன் காரணமாக இறால் முட்டைகள் அழிவடையுமென்பதுடன், இறால் பிடிப்பில் ஈடுபடுவோரின் தொழிலும் பாதிக்கப்படும்.
நச்சுத் தண்ணீர் ஏனைய இடங்களுக்கும் பரவி புல்பூண்டுகள் முளைக்காத நிலைமை ஏற்படும். கடற்கரையோரங்களில் வளரும் கண்டல் தாவரங்களும் அழிவடையும். ஆகவே, இப்பிரதேசத்தில் இறால் பண்ணை அமைக்கப்படுவதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்' என்றார்.
'மேலும், வாகரைப் பிரதேச இளைஞர், யுவதிகளின் தொழில்வாய்ப்பைக் கருத்திற்கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டுமாயின், இங்கு ஆடைத் தொழிற்சாலையொன்றை நிறுவமுடியும். இதன் மூலம் இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கமுடியும்' எனவும் அவர் கூறினார்.
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago