2025 மே 14, புதன்கிழமை

இலக்கியப் பண்பாட்டு விழா

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.திவாகரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட இலக்கியப் பண்பாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (22) ஞாயிற்றுகிழமை (23) என இருநாள் விழாவாக நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த இலக்கியப் பண்பாட்டு விழா, மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரி மண்டபத்தில், நாளைக் காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவுபெறவுள்ளது.

இவ்விழாவின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட காலத்தால் அழியாத பாரம்பரிய பண்பாடு விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதே, இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நோக்கத்துக்காக மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை, மாவட்ட கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து, இவ்விழாவை, மேற்படி இரு நாள்களிலும் நான்கு அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவென, மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்விழாவையொட்டி பண்பாட்டுப் பேரணி, பாரம்பரியப் பொருட்களின் கண்காட்சிக் கூடம், நாடக அரங்கு, ஆய்வரங்கு கலை அரங்கு, களிகம்பு இசைக் கச்சேரி, ஆதிவாசிகளின் நடனம் உட்பட பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு, மூத்த கலைஞர்களின் கௌரவம் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .