2025 மே 14, புதன்கிழமை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தேர்தல் அறிக்கையிடல் செயலமர்வு

Gavitha   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால், தேர்தல் அறிக்கை இடல் தொடர்பான செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (08) பிறிட்ச் வியு விடுதியில் நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர்  குமார் லொக்கேஸ் மற்றும் அதன் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி அமீர் ஹூஸைன் ஆகியோர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி அமீர் ஹூஸைன், 'தேர்தல் தொடர்பில் ஊடக அறிக்கை செய்யப்படும் போது, பிராந்திய ஊடகவியலாளர்கள்; அரசியல் வாதிகளுக்கு விலை போகக் கூடாது.
நீதியாகவும் நேர்மையாகவும் அறிக்கையிட வேண்டும். வாக்குரிமை என்பது ஒரு ஜனநாயகமாகும். தேர்தல் செய்திகளை எழுதும் போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக அல்லது ஒரு அரசியல் வாதிக்கு ஆதரவாக அறிக்கையிடாமல் நீதியாகவும் நேர்மையாகவும் அறிக்கையிட வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X