Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பு, கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், இன்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அத்தோடு கொரோனா நோயில் இருந்து மக்களையும் பிரதேசத்தையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதுத் தொடர்பிலான சுவரொட்டிகளும் பொது இடங்களில் ஒட்டப்பட்டன.
35 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago