Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 09 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு நகருக்குத் தெற்கேயுள்ள படுவான்கரைக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, இலவச சட்ட ஆலோசனை வழங்க, இலங்கை சட்டக் கல்லூரி இந்து மகா சபை சட்ட மாணவர் அமைப்பு முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் நாளை முழுநாளும் படுவான்கரையிலுள்ள 7 கிராமங்களில் இந்த இலவச சட்ட உதவி ஆலோசனை அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரையும், தாந்தாமலை, கடுக்காமுனை, கச்சக்கொடித்தீவு ஆகிய இடங்களிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் காலை 10 தொடக்கம் 12 மணிவரையும், பாலையடிவெட்டை, திக்கோடை ஆகிய கிராமங்களிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடம் மற்றும் கணேஷபுரம் கண்ணகி அம்மன் ஆலய முன்றல் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையும் தமது சட்ட மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வன்முறைப் பாதிப்பு, போதைப் பொருளுக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் நிலைமை, சிறுவர் பெண்கள் மீதான துஷ்பிரயோகம், காணி சம்பந்தமான பிணக்குகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களும் அவற்றால் ஏற்படும் கடன் அறவீட்டுத் தொல்லையும் இதுபோன்ற நாளாந்தம் பொது மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தாங்கள் இலவச சட்ட ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்கவுள்ளதாக சட்ட மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு இடம்பெயர் சேவைகளை நடத்துவதன் மூலம் பெற்றோரினதும் சிறுவர்களதும் சிக்கல்களற்ற சுபீட்சமான எதிர்காலத்துக்கு தாம் வழிகாட்டுவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago