Editorial / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு விகாரையில், யானைகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தும் யானைவெடி வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குறித்த விகாரையின் விகாராதிபதியான தேரரை, எதிர்வரும் 1ஆ ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான், வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.
கடந்த 2ஆம் திகதியன்று, ஓமனியாமடு, கல்மடு மலையடிவாரப் பகுதியில் மது போதையில் சென்ற 7 இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விஹாரதிபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, விகாராதிபதி, யானைவெடியைக் கொழுத்தி, அதனை ஓர் இளைஞனின் வயிற்றில் வைத்துக் கட்டிப்பிடித்ததில் வெடி வெடித்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், தேரர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி ஈ.எல். சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரரை, பொலிஸார் கைது செய்து, சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
7 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
7 hours ago
04 Feb 2026