2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் திறக்கப்பட வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணத்துக்கான அலுவலகத்தை, மாகாணத்தின் மத்தியிலுள்ள மட்டக்களப்பில் திறப்பதற்கு, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் தற்போது யுத்தம் இல்லாத நிலையிலும்,  மக்கள் அமைதியாக வாழும் இச்சூழ்நிலையிலும்,  மாகாண இளைஞர் சேவை அலுவலகத்தை மட்டக்களப்பில் அமைப்பதால், எந்தவொரு சவாலும் ஏற்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத் திறப்பு விழா, கல்லடியில் புதன்கிழமை (14)  மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதுடன், பொருளாதார அமுலாக்கம் தொடர்பிலும் பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன.

"எனவே, எதிர்காலத்தில் இளைஞர், யுவதிகள்  தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், நாட்டின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக இருக்கும் வகையிலும், இயங்காதுள்ள தொழிற்சாலைகளை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

"மேலும், இந்த மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றியுள்ள  பல இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X