Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இந்த மண்ணை நம்பிப் பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசியவரை காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே, இளைஞர், யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன், சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இவரது முன்மொழிவுகளுக்கு அமைவாக, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2.69 கிலோ மீற்றர் நீளமான சுங்கான்கேணி கிராம வீதி, நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில், பாராளுமன்ற உறுப்பினரால் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன் எம்.பி, “நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவாக அமுலாக்குவதில், மிகப்பெரும் சவால்கள் உள்ளன.
“இருந்தபோதிலும், நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஓர் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். அந்தக் கட்சியின் உறுப்பினர் இந்நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார்.
“ஓர் இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றை செய்து வருகின்றோம்.
“நான் அடிக்கல் வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமல் இருந்த பொது நூலகத்துக்கான கட்டப் பணிக்கு நான் 200 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்து, தற்போது பணி நடைபெறுகின்றது. மே மாதம் அல்லது அதற்குப் பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.
“அதேபோன்று, 62 கிலோமீற்றர் வீதியை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100 கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்குக் கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40 கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025