Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தெரிவுசெய்வதற்கான பரசீலனை, இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளதென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் காலை 08 மணி முதல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலத்தில் இப்பரிசீலனை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள பொருத்தமான சிறந்த இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு இளைஞர் கழகங்களிடம் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் 88 திட்டங்கள் இளைஞர் கழகங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களைப்; பரிசீலித்து, அவற்றிலிருந்து பிரதேசத்துக்குப் பொருத்தமான, சமகாலத் தேவையுள்ள 44 அபிவிருத்தித்திட்டங்கள் தெரிவுசெய்யப்படவுள்ளன.
தெரிவுசெய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதற்கட்ட கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வைத்து இளைஞர் கழகங்களிடம் கையளிக்கப்படும்.
குறிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக, சிறந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தும் இளைஞர் கழகங்களில் ஒன்று தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்படுமிடத்து, அக்கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு மாவட்டக் காரியாலயத்தின் 0652224376 என்ற இலக்கம் மூலமாகவோ அல்லது மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் 0777874472 என்ற இலக்கம் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago