2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் மூவர் தெரிவுசெய்யப்படுவர்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலின்போது,  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 03 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ்  இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி ஒருவரும் காத்தான்குடி,  ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி ஒருவரும் மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை தென்னெருவில்பற்று, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி ஒருவரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 28ஆம் திகதி ஒவ்வொரு பிரதே செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X