2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச பஸ் சுவரில் மோதி விபத்து

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சேவை பஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தம்புள்ளை-கலேவெல பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணிகளில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்த கலேவெல போக்குவரத்துப் பொலிஸார், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வேறு பஸ்ஸில் தமது பயணத்தை தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு  8.45 மணியளவில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குறித்த பஸ், தம்புள்ளை-கலேவல பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் ஒன்றின் மீது மோதி விபத்துக்கிள்ளானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X