Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் அவசியமாகுமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறப்பினர் கலாநிதி ஏ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு அந்தக்கட்சியினுள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படல் வேண்டும்.
நான்கு கட்சிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு கட்சி மாத்திரம் செல்வாக்கு செலுத்த முடியாது. ஏனைய கட்சிகளின் கூட்டு ஒருமைப்பாடுடனேயே முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற நான்கு கட்சிகளும் சேர்ந்துதான் வடமாகாண சபை முதலமைச்சரரை தீர்மானித்தது. தற்போது ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற ஒரு கட்சி மாத்திரம் ஆதிக்கம் செலுத்த முடியாது
கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படல் வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். அப்போதுதான் தனித்துவமான சின்னம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும். அந்தச் சின்னம் தேர்தல் வாக்குச் சீட்டில் இடம்பெறும்.
ஒரு கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகமும் விமர்சனமும் வரும்போது அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். அவ்வாறில்லாமல் உட்கட்சி ஜனநாயகம் இல்லாவிட்டால் அக்கட்சி நலிவடைந்து விடும்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு மோசடி செய்யக் கூடாது. மக்களை ஏமாற்றுகின்ற மக்களுக்கு துரோக மிழைக்கின்ற அரசியலை செய்யக் கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago